/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லைசென்ஸ் இன்றி டூவீலரில் சாகசம் செய்தவர் கைது
/
லைசென்ஸ் இன்றி டூவீலரில் சாகசம் செய்தவர் கைது
ADDED : மார் 29, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 21. இவர் மூணாறு நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்தும் ஏற்படுத்தும் வகையில் டூவீலரில் நீண்ட நேரம் சாகச பயணம் செய்தார்.
அவரை மூணாறு எஸ்.ஐ., அஜேஷ் கே.ஜான் தலைமையில் போலீசார் பிடித்து விசாரித்தபோது லைசென்ஸ் இல்லை என தெரியவந்தது. போலீசார் சுரேஷை கைது செய்தனர்.
இவர் நான்கு நாட்களுக்கு முன்பு பயணிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜாமினில் வெளியில் வந்தவர் மீண்டும் போலீசாரிடம் சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.