/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நடந்து சென்ற பெண்ணிடம் தாலியை பறித்தவர் கைது
/
நடந்து சென்ற பெண்ணிடம் தாலியை பறித்தவர் கைது
ADDED : ஜன 01, 2025 06:38 AM
கம்பம் : நடந்து சென்ற பெண்ணிடம் டூ வீலரில் வந்து தாலி செயினை பறித்துவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் பாரதியார் நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் முத்துராஜா மனைவி ஆனந்த வள்ளி 45, இவர் இங்குள்ள வேலப்பர் கோயில் தெரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். டிச. 11 க் இரவு கடையில் பணி முடிந்து இரவு 10:00 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, கிராமச்சாவடி தெருவில் எதிரில் டூவீலரில் வந்த மர்ம நபர், ஆனந்த வள்ளி கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் தாலி , இரண்டு ஒரு கிராம் அளவிலான தங்க குண்டுகள், கவரிங் செயின் பறித்து சென்றுள்ளார். புகாரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, டூவீலர்
பதிவெண் தெரிந்தது. அதன் உரிமையாளரிடம் விசாரித்தனர். அதில் திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் செந்தில் வேலவன் 44, என்பவர் தனது டூவீலரை இரவல் வாங்கி சென்றதாக கூறினார்.
செந்தில் வேலவன் கம்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு நுழைவு பகுதியில் ரோட்டோரம் தள்ளுவண்டியில் கடை வைத்து, வடை வியாபாரம் செய்வது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

