ADDED : டிச 30, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தாடிச்சேரி செல்லாயி அம்மன் கோயில் தெரு செல்வராஜ் 61. இவர் போடேந்திரபுரம் முனீஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்றார்.
அங்கே வந்த உப்புக்கோட்டை வடக்கு தெரு சுருளிராஜா கத்தியை காட்டி செல்வராஜிடம் பணம் கேட்டு மிரட்டினார். அருகில் இருந்தவர்கள் சுருளிராஜாவை பிடித்து, வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர்.
செல்வராஜ் புகாரில் சுருளிராஜாவை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

