ADDED : மே 22, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அக்னிகாளை 65. தச்சு வேலை செய்தார்.
காட்ரோட்டிலிருந்து ஊருக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டின் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது தடுமாறி விழுந்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அக்னிகாளை சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-