/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி --- மதுரை இடையே காலையில் ரயில் இயக்க மனு
/
போடி --- மதுரை இடையே காலையில் ரயில் இயக்க மனு
ADDED : அக் 26, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து, ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள், மாணவர்கள், பணியாளர்கள், வியாபாரிகள் பயன் பெறும் வகையில் போடியில் இருந்து மதுரைக்கு தினசரி காலையில் ரயில் இயக்கவும், போடியில் இருந்து மதுரை, திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் எனவும் கார்டமம் சிட்டி ரயில் பயன் படுத்துவோர் அசோசியேசன் சார்பில் செயலாளர் சரவணகுமாரன், பி.ஆர்.ஓ., ஜெய்சன் உட்பட பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.