ADDED : ஜன 13, 2025 04:14 AM

கம்பம், : கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு, நடந்து வரும் இசை நாட்டிய விழாவில் ஏராளமான நாட்டிய கலைஞர்கள், நாட்டியாஞ்சலியில் பங்கேற்று வருகின்றனர்.
இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு இசை நாட்டிய விழா நடந்து வருகிறது. கடந்த ஜன.10ல் சென்னை நீலாத்ரி இசைப்பள்ளி குழுவினரின் வைகுண்ட ஏகாதசி பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.
பின்னர் இறைவி நுண்கலைப் பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை செல்வமாலா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை கச்சேரி நடந்தது. பின்னர் மதுரை அஷ்மிகா நாட்டியாஞ்சலி பள்ளி நடத்திய பரத நாட்டியம், பெரியகுளம் இஸ்கான் கோயில் சார்பில் நடந்த 'வாழ்வை மாற்றும் கீதை', என்ற பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.
தொடர்ந்து கம்பம் இறைவி நுண்கலைப் பள்ளி நடத்திய ஆறுபடை வீடு நாட்டிய நாடகம் நடந்தது. தொடர்ந்து இன்னும் நாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. பக்தி இன்னிசை கச்சேரிகளை திரளாக பொது மக்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.