ADDED : பிப் 25, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மாசி மகம் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனமும், கிரிவலம் சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப்,
செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜய ராணி செய்திருந்தனர்.
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் மாசி மகம் பவுர்ணமியை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.
முப்பெரும் தேவியருக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 11 வகை பொருட்களில் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.