ADDED : ஜன 14, 2025 11:00 PM
உத்தமபாளையம்; உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் இந்திரா தலைமை வகித்தார் . செயலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டு வேலவன், பேராசிரியர் திருமலைச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
கடந்த கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 500 க்கு 496 மதிப்பெண் பெற்ற சாதனை மாணவி தஸ்மின், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 600 க்கு 578 மதிப்பெண் பெற்ற மாணவி பரணி ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் சாதனை மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவிகளின் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்வில் சின்னமனுார் விகாசா பப்ளிக் பள்ளியின் முதல்வர் ராபியா பர்கானா, குச்சனுார் அன்னை சகுந்தலா பள்ளியின் முதல்வர் ஜெயராணி, உத்தமபாளையம் விகாசா கல்வியியல் கல்லுாரியின் முதல்வர் தேவி, பள்ளியின் முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா, பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.