/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பள்ளி மாணவருக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்'
/
அரசு பள்ளி மாணவருக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்'
ADDED : ஆக 01, 2025 02:10 AM

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், டி.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், நாகஜோதி மகன் யோகேஷ்வரன் 19. சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2022- -23ம் ஆண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 523 மதிப்பெண் எடுத்தார்.
நீட் தேர்வில் இரண்டாம் முறை 425 மதிப்பெண்கள் எடுத்தார். பி.டி.எஸ்., படிப்பதற்கு இடம் கிடைத்தது. மூன்றாம் முறை 447 மதிப்பெண்கள் பெற்று சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. இவரை பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன், தலைமை ஆசிரியர் பாண்டியன், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர். மாணவர் யோகேஷ்வரன் கூறுகையில், ' பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம்.
கிராமப்புற மாணவர்களுக்கு நீட்தேர்வினால் மருத்துவ படிப்பு சாத்தியம்,' என்றார்.--