/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி செப்.28ல் மினி மாரத்தான் போட்டி
/
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி செப்.28ல் மினி மாரத்தான் போட்டி
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி செப்.28ல் மினி மாரத்தான் போட்டி
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி செப்.28ல் மினி மாரத்தான் போட்டி
ADDED : செப் 22, 2024 04:02 AM
ஆண்டிபட்டி : பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி ஒன்றிய பா.ஜ., சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி செப்டம்பர் 28ல் ஆண்டிபட்டியில் நடத்த உள்ளதாக பா.ஜ., மாவட்ட விளையாட்டு பிரிவு துணை தலைவர் திருமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, பிரதமர் மோடி பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு நடக்க உள்ள மினி மாரத்தான் போட்டியில் பெண்களும் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 5.5 கி.மீ., தூர ஓட்டம் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் துவங்கி ஏத்தக்கோவில் ரோடு, பிச்சம்பட்டி கண்மாய் இணைப்பு ரோடு வழியாக ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் முடிகிறது.
ஆண்களுக்கான 9.5 கி.மீ., தூர ஓட்டம் ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோடு, மணியக்காரன்பட்டி, கோபால்சாமி கோயில் ரோடு, பிச்சம்பட்டி வழியாக ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் முடிகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.5000, 3ம் பரிசாக ரூ.3000ம் ஆறுதல் பரிசாக ரூ.1000 வீதம் 5 பேருக்கும் வழங்கப்படும். மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் 90806 87958 என்ற அலைபேசியில் முன்பதிவு செப்., 26க்குள் செய்ய வேண்டும் என்றார்.