ADDED : அக் 28, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே துரைராஜபுரத்தை சேர்ந்தவர் மொக்கை 70.
போடியில் வசிக்கும் டாக்டர் முருகராஜ் தோட்டத்தை நிர்வாகம் செய்து வந்துள்ளார். போடி சுப்புராஜ் நகரில் முருகராஜ் புதிதாக கட்டி வரும் வீட்டின் படிக்கட்டில் மொக்கை நான்கு நாட்களுக்கு முன்பு ஏறி சென்ற போது தவறி கீழே விழுந்துள்ளார். காயம் அடைந்த மொக்கையை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இன்று (அக்.,28) இறந்தார். மகள் கார்த்திகை லட்சுமி புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
