/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேருக்கு கண்ணாடி கொட்டகை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
/
தேருக்கு கண்ணாடி கொட்டகை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
தேருக்கு கண்ணாடி கொட்டகை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
தேருக்கு கண்ணாடி கொட்டகை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
ADDED : ஆக 01, 2025 02:07 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலிற்கு சொந்தமான தேருக்கு ரூ.21 லட்சத்தில் கண்ணாடி கொட்டகை அமைக்கப்பட்டு நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலின் தேர் ஊரின் கிழக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேல் ஓடாமால் நிறுத்திய தேரை, அனைத்து சமூகத்தினரும் இணைந்து புதுப்பித்து தேரோட்டம் நடத்தி வருகின்றனர். உயரமான தேர் தகரங்களால் மூடி வைத்தனர். இரண்டு தகரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் காக்கைகள் எச்சம் விழுந்து தேர் அசுத்தமாகும். பெரிய கோயில் தேர்கள் அனைத்தும் கண்ணாடிகளால் மூடப்பட்டு, அதற்கு மேல் பிளாஸ்டிக் கவர் போர்த்தப்படும், வெளியில் எப்போதும் தெரியும் படி இருக்கும். இந்த தேருக்கு ரூ.21 லட்சத்தில் கண்ணாடி கொட்டகை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.
ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, தேர் கண்ணாடி கொட்டகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாதிரியார் அந்தோணிராஜ், அறங்காவலர் குழு தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் முத்துக் குமார், முத்துகிருஷ்ணன், மாலதி, திருக்காளாத்தீஸ்வரர் சேவை அறக்கட்டளை நிறுவனர் முருகேசன் உள்ளிட்ட பல்வேறு சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.