ADDED : ஆக 14, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் மொக்கை 45, க.விலக்கு தேனி ரோட்டில் குன்னூர் டோல்கேட் அருகே மீன் கடை வைத்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன் கடையை முடித்துவிட்டு மீன் விற்ற ரூ.18 ஆயிரம் பணத்தை கடையில் கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
வழக்கம் போல் வந்து பார்த்தபோது கடையின் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.18 ஆயிரம் பணத்தை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மொக்கை கொடுத்த புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்