/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்
/
தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்
ADDED : ஜூலை 12, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பள்ளிவாசல் தெரு ரஞ்சித்குமார் 36. இவரது மனைவி கார்த்திகைஜோதி 33.
இத்தம்பதிக்கு மூன்று மகள்கள். கார்த்திகை ஜோதி உள்ளூரில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 4 காலையில் வெளியூர் சென்று வேலை செய்ய உள்ளேன் என கணவரிடம் கூறினார்.
இதற்கு கணவர் ரஞ்சித்குமார் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு மனைவி வராமல் மூத்த மகளை வீட்டில் விட்டுவிட்டு, இளைய மகள்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.
ஜூலை 4 முதல் தற்போது வரை மனைவி, குழந்தைகள் வீட்டிற்கு வராததால், பாதிக்கப்பட்ட கணவர் தேனி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து தாய், 2 மகள்களை தேடி வருகின்றனர்.