ADDED : ஜன 17, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் ராமர் 22.
நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தெருவில் ஆடிக் கொண்டிருந்தார். இதனை இவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ராமர் வீட்டில் தூக்கிட்டார். மயங்கிய நிலையில் இருந்த ராமரை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

