/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுராபுரி பைபாசில் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்; 15 நாட்களாக வாகன ஓட்டிகள் இருளில் தவிப்பு

ADDED : ஜூலை 09, 2025 06:56 AM
தேனி : தேனி மதுராபுரி விலக்கில் உயர்மின் கோபுரம் 15 நாட்களுக்கு மேலாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி விபத்து அபாயம் தொடர்கிறது.
திண்டுக்கல்--குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி நகர்பகுதியின் நுழைவாயிலாக மதுராபுரி விலக்கு பகுதி உள்ளது.
இந்த சந்திப்பில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனர். பெரியகுளம் பைபாசில் இருந்து வரும் வாகனங்கள் தேனி நகருக்குள் வருவதற்கும், சின்னமனுார், கம்பம் செல்வதற்கும்ரவுண்டானவில் வாகனங்கள் பிரிந்து செல்கின்றன.
இதே போல் மறுமார்க்கத்தில் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் இப் பகுதி ஆபத்தான பகுதியாக உள்ளது. அடிக்கடி விபத்து நிகழ்கிறது.
இச் சூழலில் தற்போது அந்த பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் உள்ள விளக்குகள் 10 நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நடந்து செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
விளக்குகளை பழுது பார்க்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திண்டுக்கலில் உள்ளதால், அத்துறை அதிகாரிகள் தேனி பைபாஸ் ரோட்டை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு விபத்துக்களை தடுக்கவும் உயர்மின் கோபுர விளக்குகள் பளிச்சிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.