ADDED : ஜன 04, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு நகரில் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடு நடமாடியதால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
நகரில் மவுண்ட் கார்மல் சர்ச் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடுகள் அடிக்கடி நடமாடி வருகின்றன. அப்பகுதிக்கு நேற்று முன்தினம் காட்டு மாடு தீவனத்திற்காக வீடுகளின் அருகில் உள்ள தோட்டங்களில் சுற்றித் திரிந்தது. நேற்று காலை 6:00 மணி வரை முகாமிட்டதால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.