sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி மூவர் கைது

/

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி மூவர் கைது

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி மூவர் கைது

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக்கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி மூவர் கைது


ADDED : செப் 26, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்:மும்பை போலீஸ்காரர் லட்சுமண் தம்னோ குராடே 33, என்பவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த தேனியை சேர்ந்த சேகர்பாபு, திண்டுக்கல்லைச் சேர்ந்த டிஸ்மிஸ் போலீஸ்காரர் நாகநரேந்திரன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை தார்ரே காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் லட்சுமண்தம்னோ குராடே. பந்த்ரா காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக உள்ளார். இவரிடம் பழைய 2000 நோட்டுகள் எவ்வளவு இருந்தாலும் நான் மாற்றித்தருகிறேன் என மும்பையை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தாராவி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் ரூ.500 கொடுத்தால் இரட்டிப்பு தொகைக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தருவர் என கூறி மும்பையில் இருந்த சுபாஷை அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னையைச் சேர்ந்த செந்தில் என்பவர் ரூ.500க்கு இரட்டிப்பாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தருவதாக சுபாஷ் கூறினார்.

செந்திலிடம் அலைபேசியில் பேச செய்தார். மும்பையில் பலருக்கும் இது போல் பணம் வாங்கி கொடுத்துள்ளதாக செந்தில் ஆசை காட்டினார்.

பின்னர் 4 மாதங்களுக்கு முன்பு செந்திலை சென்னை வந்து லட்சுமண் சந்தித்து பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து லட்சுமண் தனது மைத்துனர் கங்காதர் சோமானிங் மஞ்சுல்கருடன் செப். 22 திண்டுக்கல் வந்துள்ளார். சுபாஷ் ஏற்பாட்டில் வத்தலக்குண்டு லாட்ஜில் இருவரும் தங்கினர்.

தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேகர்பாபுவை 45, லட்சுமணுக்கு செந்தில் அறிமுகப்படுத்தினார். எவ்வளவு பணம் கொண்டு வந்துள்ளீர்கள் என சேகர்பாபு கேட்டுள்ளார்.

அதற்கு ரூ.16 லட்சம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இது போதாது குறைந்தது ரூ.50 லட்சம் என சேகர்பாபு கூறியுள்ளார்.

பின்னர் பெரியகுளம் லாட்ஜில் லட்சுமணை தங்க வைத்துள்ளனர். மும்பையில் உறவினர்கள், நண்பர்களிடம் பேசி ரூ.35 லட்சத்தை லட்சுமண் திரட்டினார். தேனியில் உள்ள வங்கியில் நேற்று முன்தினம் (செப்.24) காலையில் ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.

கூட்டுசதித்திட்டம் லட்சுமணை பணத்துடன் சேகர்பாபு, செந்தில் காரில் அழைத்துச் சென்றனர். கங்காதர் சோமானிங் மஞ்சுலை திண்டுக்கல்லில் காத்திருக்கும்படி அனுப்பினர். பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் ஒரு வீட்டில் வைத்து ரூ.2 ஆயிரம் நோட்டுக்கட்டுகளை திறந்து காண்பித்தனர். அப்போது அங்கு வந்த சிலர் தங்களை போலீஸ் என கூறி லட்சுமணை மிரட்டினர். இந்த விபரம் வெளியே தெரிந்தால் மும்பையில் உனது போலீஸ் வேலைக்கு சிக்கலாகிவிடும் என்றனர்.

அப்போது காரில் ரூ.35 லட்சத்துடன் சேகர்பாபு, செந்தில் தப்பினர். மற்றொரு காரில் 'செட்அப் போலீஸ்' நான்கு பேரும், லட்சுமணை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். செம்பட்டி -திண்டுக்கல் பைபாஸ் அருகே இறக்கிவிட்டு அவர்களும் தப்பினர்.

ரூ.35 லட்சத்தை பறிகொடுத்த லட்சுமண் புகாரில் வடகரை இன்ஸ்பெக்டர் கீதா, எஸ்.ஐ., விக்னேஷ் விசாரித்தனர்.

விசாரணையில், பணம் பறிப்பில் சேகர்பாபு, செந்தில் நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்துப்பகுதியைச் சேர்ந்த 2022ல் போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாகநாகேந்திரன் 33. அதே ஊரைச் சேர்ந்த ராம்குமார் 32.

ஆண்டிபட்டி அஜீத்குமார் 30, போடி பார்த்திபன் 35, ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த அஜித்குமாரையும், திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் பதுங்கியிருந்த நாகநாகேந்திரன், ராம்குமாரையும் போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தப்பிய சேகர்பாபு, செந்தில், சுபாஷ், பார்த்திபனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us