/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா, ஜ., ஆட்சேபனைக்கு நகராட்சி தலைவர் விளக்கம்
/
பா, ஜ., ஆட்சேபனைக்கு நகராட்சி தலைவர் விளக்கம்
ADDED : டிச 01, 2024 06:44 AM
கம்பம் : கம்பம் குப்பையில்லா நகரம் என்று மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் பெறுவதற்கு பா.ஜ.,தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு கம்பம் நகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் வனிதா கூறியதாவது :
கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகையை பொறுத்த வரை 77,290 பேர்களும், 21,811 வீடுகளும் உள்ளன. இதில் 17,283 வீடுகளில் கழிப்பறை உள்ளதாகவும், 3835 வீடுகள் கழிப்பறை இல்லாதவையாக உள்ளது. கழிப்பறை இல்லாத வீடுகள் பயன்படுத்துவதற்கென 8 சுகாதார வளாகங்களும், இரண்டு கட்டண கழிப்பறைகளும், 4 சிறுநீர் கழிவறைகளும் செயல்பட்டு வருகிறது. கட்டண கழிப்பறை,சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு மகளிர் குழுவினர் பராமரித்து வருகின்றனர்.
இதனால் கம்பத்தில் திறந்த வெளி கழிப்பறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பைகள் சேகரம் செய்யும் பணி மாநிலம் முழுவதும் நகராட்சிகளின் இயக்குநரக உத்தரவுப்படி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 149 பணியாளர்கள் தனியார் மூலமும், நகராட்சி நிரந்தர பணியாளர்கள் 36 பேர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
குப்பைகள் அன்றாடம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. ஆங்கூர் பாளையம் ரோட்டில் சாக்கடை மற்றும் அலுவலக கழிப்பறை கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.