/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆங்கில புத்தாண்டிற்கு தயாராகும் மூணாறு ஓட்டல்கள் ஹனிமூன் தம்பதியினர் வருகை அதிகரிப்பு

ADDED : டிச 28, 2024 07:25 AM
மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளுடன் ஓட்டல்கள் தயாராகி வருகின்றன. ஹனிமூன் தம்பதியினர் வருகையும் அதிகரித்துள்ளது.
நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்களில் 'டி.ஜே' எனப்படும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு அனைத்து வகை சைவம், அசைவ உணவுகளும் பறிமாறப்படும். நபர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். நட்சத்திர ஓட்டல்கள் தவிர பிற ஓட்டல்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும். அவற்றிலும் நட்சத்திர ஓட்டல்களை போன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக விழாக் கால நடைமுறைபடி தங்கும் விடுதிகளில் 20 முதல் 25 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்படும்.
முன்பதிவு: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால் விடுதிகளில் அறைகள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது.
அது போன்று ஆங்கில புத்தாண்டை இங்கு கொண்டாட ஏதுவாக ஜன., 10 வரை அனைத்து ஓட்டல்களிலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது வடமாநிலங்களில் திருமண சீசன் என்பதால் 'ஹனிமூன்' தம்பதியினர் அதிகம் வருகின்றனர்.