/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பையை வீசுவதால் மாசாகும் மூணாறு முதிரைபுழை ஆறு
/
குப்பையை வீசுவதால் மாசாகும் மூணாறு முதிரைபுழை ஆறு
ADDED : டிச 30, 2024 06:25 AM

மூணாறு : மூணாறில் முதிரைபுழை ஆற்றில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை வீசுவதால் மாசு ஏற்பட்டுள்ளது.
மூணாறில் சேகரமாகும் குப்பையை கையாள ஊராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக நகரில் ஓட்டல் உள்பட வர்த்தக ஸ்தாபனங்களில் குப்பையை தரம் பிரித்து கட்டண அடிப்படையில் நேரடியாக சேகரிக்கின்றனர். குப்பை, கழிவுகளை ஆறு, பொது இடம் ஆகியவற்றில் வீசுவதை தடுப்பதற்கு ஊராட்சி சார்பில் பசுமை படை அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தவிர சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் ஆறு, பொது இடங்களில் குப்பையை வீசுவோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி நகரின் மையப் பகுதியில் ஓடும் முதிரைபுழை ஆற்றில் குப்பை உள்ளிட்ட கழிவுகள் வீசப்படுகின்றன. தற்போது ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைவு என்பதால் குப்பை குவிந்து ஆற்று நீர் மாசு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்று நீரை பள்ளிவாசல், குஞ்சு தண்ணி உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீராக பயன்படுத்து கின்றனர். அதனால் குப்பையை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குப்பையை அகற்றி ஆற்றை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.