/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குவாரி பிரச்னையில் நடந்த கொலை: மூவரிடம் விசாரணை
/
குவாரி பிரச்னையில் நடந்த கொலை: மூவரிடம் விசாரணை
ADDED : ஆக 28, 2025 06:08 AM
கம்பம் : காமயகவுண்டன்பட்டி குவாரி உரிமை தொடர்பான பிரச்னையில் நடந்த கொலை தொடர்பாக 2 பேர் கஸ்டடியில் உள்ள நிலையில் மேலும் 3 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பம் சுருளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சசிக்குமார் 40. இவர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் கம்பம் நகர் செயலாளர். காமயகவுண்டன்பட்டியில் உள்ள குவாரியில் கல் உடைத்து விற்பனை செய்யும் உரிமை தொடர்பாக இவருக்கும் வேறு சிலருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
கடந்த ஆக.25 இரவு காமயகவுண்டன்பட்டியில் உள்ள மண்டபம் ஒன்றில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து, பேச்சு வார்த்தையின் போது தகராறு ஏற்பட்டு, சசிக்குமார் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அன்று இரவே சின்னச்சாமி, குரு இளங்கோ ஆகிய இருவரை கைது செய்தார். தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய மணிமாறன், அமைதி, அல்லி பாலா ஆகிய மூவரை பிடித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இவ்வழக்கில் இதுவரை 5 பேர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன், செல்லத்துரை, கவுரி, திருமலை நம்பி, ராஜாமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

