/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
10 நாட்களாக ரோட்டில் நிற்கும் மர்ம கார்
/
10 நாட்களாக ரோட்டில் நிற்கும் மர்ம கார்
ADDED : ஏப் 22, 2025 06:38 AM
கம்பம்: க.புதுப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் 10 நாட்களாக கார் ஒன்று மர்மமான முறையில் நிற்கிறது. யாருடைய கார் என போலீசார் விசாரிக்காமல் உள்ளனர்.
உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் க.புதுப்பட்டி அருகே ரோட்டின் ஓரமாக சிவப்பு கலர் கார் ( KL 01 AB 2100 ) ஒன்று கடந்த 10 நாட்களுக்கு முன் வந்துள்ளது. காரை சிலர் விரட்டி வந்ததாகவும், காரில் இருந்த இருவர் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஒடி விட்டதாகவும், பின்னர் விரட்டி வந்தவர்கள் காரை பூட்டி விட்டு, டயர்களில் இருந்த காற்றை பிடுங்கி விட்டு சென்றதாக அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
10 நாட்களாக தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நிற்கிறது. இந்த ரோட்டில் போலீஸ் ரோந்து வாகனம், உத்தம பாளையம், கம்பம் போலீசார், டி.எஸ்.பி. என எல்லோரும் தினமும் சென்று வருகின்றனர். யாரும் கடந்த 10 நாட்களாக நெடுஞ்சாலையில் நிற்கும் காரை பற்றி விசாரிக்கவில்லை. காரின் உரிமையாளர் யார். என்ன காரணத்திற்காக தொடர்ந்து அங்கு நிற்கிறது என தெரியவில்லை.