/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய விவசாயிகள் தினம் கண்மாய் கரையில் பனை நடவு
/
தேசிய விவசாயிகள் தினம் கண்மாய் கரையில் பனை நடவு
ADDED : அக் 13, 2025 05:37 AM

கூடலுார், :தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில், 'சோலைக்குள் கூடல்' அமைப்பு சார்பில் பனை நடவு செய்யப்பட்டது.
கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பினர் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்யும் 425வது வாரத்தில் தேசிய விவசாயிகள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் பனை விதை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தங்கதமிழ்செல்வன் எம்.பி., நடவு செய்து துவக்கி வைத்தார். இவர்களுடன் இணைந்து ஏராளமான தன்னார்வ அமைப்புகளும், விவசாயிகளும், பொது மக்களும் பனை நடவு செய்தனர். கண்மாய் கரையின் துவக்கப் பகுதியில் இருந்து 2 கி.மீ., துாரம் வரை 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. மேலும் பனை மரங்களின் பயன்கள் குறித்து அனைவருக்கும் விளக்கப்பட்டன.