/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்; பேரூராட்சியில் அனுமதி ஓடைப்பட்டி, தேவதானப்பட்டியில் பணி ஆரம்பரம்

ADDED : மார் 12, 2024 11:51 PM
கம்பம் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தற்போது பேரூராட்சிகளிலும் செயல்படுத்த அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
ஊராட்சிகளில் தினசரி சம்பளம் ரூ.283 என்றிருந்தது தற்போது ரூ.291 ஆக உயர்த்தி வழங்குகின்றனர். இந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவு கடந்த பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் இத் திட்டம் க.புதுப்பட்டி பேரூராட்சியில் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டு ஓடைப்பட்டி மற்றும் தேவதானப்பட்டி ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் நூறு நாள் வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் சடாட்சரம் கூறுகையில், 2022 - -2023 ம் ஆண்டிற்கு புதுப்பட்டியும், 2023-2024 ம் ஆண்டிற்கு ஓடைப்பட்டி, தேவதானப்பட்டியும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் பேரூராட்சிகளுக்கு சொந்தமான ஒடைகளை தூர் வாரவும், நீர்வழித் தடங்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வரும் ஆண்டுகளில் இத் திட்டம் வாய்ப்புள்ள பேரூராட்சிகளில் செயல்படுத்த அடுத்தடுத்து அனுமதி கிடைக்கும்.
மூன்று பேரூராட்சிகளிலும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பேரூராட்சியிலும் 60 முதல் 80 பேர்கள் வரை தினமும் பணிக்கு வருகின்றனர் என்றார்.