/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 26, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் :   தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் அருகே  அணைப்பட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளி சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், மற்றும் நேர்மையான கண்ணியமான முறையில் தேர்தலை நடத்துதல், அதற்கான பங்களிப்பு செய்தல் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
பள்ளியின் தலைமையாசிரியர்  சுந்தர், ஒட்டுச் சாவடி அலுவலர் அருள்ஜோதி, தன்னார்வ ஆசிரியர் சுந்தரவள்ளி மற்றும் மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

