/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2026ல் தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அ.ம.மு.க., தினகரன் நம்பிக்கை

ADDED : ஏப் 03, 2025 02:36 AM
போடி:''தமிழகத்தில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கூறினார்.
தேனிமாவட்டம் போடி தொகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது :
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். கச்சத் தீவை 1974 ல் தாரை வார்த்து கொடுக்கும் போது மவுனமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தார். முதல்வர் தேர்தல் அறிக்கையில் கச்சத் தீவை மீட்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை இதற்கான நடவடிக்கை இல்லை.
கச்சத்தீவை மீட்பதில் நாங்கள் ஆதரவாக இருப்போம். வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு உள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு, போதை கலாசாரம் அதிகம் பரவி உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் ஏவல் துறையாக செயல்படுகிறது. சில நேரங்களில் என்கவுன்டர் இருந்தும் கொலை, கொள்ளை தொடர்கிறது என்றார்.