ADDED : டிச 18, 2024 07:07 AM

--தேவதானப்பட்டி : நேரு யுவகேந்திரா மாவட்ட அளவில் இளையோர் திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு கலைத்திறனை வெளிபடுத்தினர்.
பெரியகுளம் நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில், நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலால் அலுவலர் ரவிச்சந்திரன், இளையோர் அலுவலர் சரண், ஒன்றிய தலைவர் தங்கவேல், நகராட்சி தலைவர் சுமிதா, கல்லூரி துணை முதல்வர் ஜோஷிபரம் தொட்டு, நிர்வாக இயக்குனர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர்.
சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, தேனி கனரா வங்கி, தபால் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமிய நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், கவிதை போட்டி, அறிவியல் கண்காட்சி குழு மற்றும் தனி நபர் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பிரித்தா, துணை தலைவர் ராஜபாண்டியன் பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன் செய்திருந்தார்.