/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சிகளில் தடையின்றி குடிநீர் பம்பிங் ஸ்டேஷனில் புதிய மோட்டார்
/
பேரூராட்சிகளில் தடையின்றி குடிநீர் பம்பிங் ஸ்டேஷனில் புதிய மோட்டார்
பேரூராட்சிகளில் தடையின்றி குடிநீர் பம்பிங் ஸ்டேஷனில் புதிய மோட்டார்
பேரூராட்சிகளில் தடையின்றி குடிநீர் பம்பிங் ஸ்டேஷனில் புதிய மோட்டார்
ADDED : மார் 21, 2025 06:35 AM

கூடலுார்: பேரூராட்சிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் கூடுதல் குதிரை திறன் (எச்.பி) கொண்ட பம்பிங் மோட்டார் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
முல்லைப் பெரியாற்றிலிருந்து லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு கம்பம், கூடலுார் ஆகிய நகராட்சிகளுக்கும், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல பேரூராட்சிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குடிநீர் வினியோகிக்க முடியாமல் பல பேரூராட்சி நிர்வாகங்கள் திணறி வந்தது.
பேரூராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்வதற்காக தலா 45 குதிரை திறன் கொண்ட 3 பம்பிங் மோட்டார்கள் உள்ளன. இது அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஆற்றில் பம்பிங் செய்து முழுமையாக பேரூராட்சிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தலா 75 குதிரை திறன் கொண்ட பம்பிங் மோட்டார்களை பொருத்தும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று சோதனை ஓட்டத்தில் மோட்டாரை இயக்கி துவக்கி வைக்கப்பட்டது.
இதில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.