/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : மே 30, 2019 12:02 AM
தேனி, : தேனி வெங்கடாசலபுரத்தில் அரசு உதவிபெறும் ஸ்ரீவரதவேங்கட ரமண மேல்நிலைப்பள்ளியில் 1991 --- 1993 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ' வாட்ஸ் ஆப் 'மூலம் 120 பேர் ஒருங்கிணைக்கப்பட்டனர். பள்ளிச் செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை வணங்கி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
26 ஆண்டிற்குப்பின் சந்தித்ததால் நெகிழ்ச்சியுடன் இருந்தனர். அவரவர் குடும்பத்தினருடன் மேடைக்கு வந்து அறிமுகம் செய்து கொண்டனர். பள்ளி வளர்ச்சிக்கு தங்களால் ஆன உதவிகள் செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகம், முன்னாள் மாணவர் சங்கத்தினர் செய்தனர்.