/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை இல்லை - புலம்பும் கூடலுார் மக்கள்

ADDED : ஜன 12, 2025 06:46 AM
கூடலுார :  ரேஷன் கடைகளில் வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
கூடலுார் உழவர் பணி கூட்டுறவு சங்கம், கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஒரு நாள் மட்டும் வேட்டி சேலையுடன் வழங்கப்பட்டது. அதன்பின் ரேஷன் கடைகளுக்கு வரும் அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்காமல் சர்க்கரை, பச்சரிசி, கரும்பு மட்டும் வழங்கி வருகின்றனர்.
கூடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி சேலைகளில் 50 சதவீதம் மட்டுமே அரசு அனுப்பியுள்ளது. குறிப்பாக கிராமங்களில் இதை நம்பி ஏராளமான மக்கள் உள்ளனர். குள்ளப்பகவுண்டன்பட்டியில் 900 ரேஷன் கார்டுகள் இருந்தும் 400 வேட்டி, சேலைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 சேர்த்து கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் தற்போது வேட்டி சேலையும் முழுமையாக வழங்காததால் புலம்பி வருகின்றனர்.