/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ்
/
கம்பமெட்டு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ்
கம்பமெட்டு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ்
கம்பமெட்டு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூன் 29, 2025 12:09 AM
கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் ரோட்டை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி நெடுஞ்சாலைத் துறை 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கம்பத்திலிருந்து கேரளாவை இணைக்கும் முக்கிய ரோடாக கம்பமெட்டு ரோடு உள்ளது.
சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள இந்த ரோட்டின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளாக மாறி உள்ளன. இரு மாநில போக்குவரத்து நடைபெறும் இந்த ரோட்டில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ரோட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில் , 'ஜூலை இறுதியில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உள்ளோம். ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட் உத்தரவுப்படியே அகற்ற உள்ளோம். வீடுகள் மட்டுமின்றி கடைகளில் உள்ள தற்காலிக ஷெட்டுகளும் அகற்றப்படும்,'என்றனர்.