நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: சிலமலை அரசு மேல் நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் தலைமையாசிரியர் அமுதா தலைமையில் நடந்தது.
என்.எஸ்.எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் செல்லத்துரை வரவேற்றார். முகாமில் சுற்றுச்சூழல், மழைநீர் சேகரிப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு, சிறு சேமிப்பின் முக்கியத்துவம், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.