ADDED : ஏப் 23, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமையில் நடந்தது.
சமையல் உதவியாளர் பணி நியமனத்தில் கல்வித்தகுதி 5ம் வகுப்பு என நிர்ணயம் செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் ஈஸ்வரி, தேன்மொழி, கிருபாவதி, அமுதா, கிருபா, குமரன், பிற சங்க நிர்வாகிகள் உடையாளி, அன்பழகன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

