UPDATED : நவ 18, 2026 11:14 PM
ADDED : நவ 18, 2026 08:02 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி காலமுறை ஊதியம், குறைந்த பட்ச ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை வகித்தார். நிர்வாகிள் ஈஸ்வரி, குமரன், அமுதா, கிருபாவதி, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சின்னசாமி, பாலகிருஷ்ணன், சுப்புராஜ், ராகவன், தேவேந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
