/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலக்கிய திறனறித்தேர்வு எழுதிய 4290 மாணவர்கள் 374 பேர் ஆப்சென்ட்
/
இலக்கிய திறனறித்தேர்வு எழுதிய 4290 மாணவர்கள் 374 பேர் ஆப்சென்ட்
இலக்கிய திறனறித்தேர்வு எழுதிய 4290 மாணவர்கள் 374 பேர் ஆப்சென்ட்
இலக்கிய திறனறித்தேர்வு எழுதிய 4290 மாணவர்கள் 374 பேர் ஆப்சென்ட்
ADDED : அக் 19, 2024 11:50 PM
தேனி,: மாவட்டத்தில் தமிழ் இலக்கியத்திறனறித்தேர்வினை 4,290 மாணவர்கள் எழுதினர். பதிவு செய்தவர்களில் 374 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு தமிழ் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
இத்தேர்வினை அரசு, உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத் தேர்வு எழுத விருப்ப முள்ளவர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தேர்வினை எழுத 4664 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 15 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இதில் 4290 மாணவர்கள் தேர்வினை எழுதினர். 290 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு கண்காணிப்பாளர்களாக 225 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். தேர்வு மையங்களை சி.இ.ஓ., இந்திராணி, அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் குமார் பார்வையிட்டனர். இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1500 என வீதம் ஆண்டிற்கு ரூ. 16,500 என இரு ஆண்டிற்கு ரூ.33 ஆயிரம் வழங்கப்படும்.