நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் 65. இவருக்கு குடும்பம் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார்.
நேற்று முன் தினம் கை, கால் வலி தாங்கமுடியாததால் மனம் உடைந்த முனியம்மாள் விஷம் குடித்துள்ளார். முனியம்மாவை உறவினர்கள் தேனி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலன் இன்றி இறந்தார். உறவினர் சுமதி புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.