ADDED : பிப் 01, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் வடகரை மயானக்கரை ரஸ்தா தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பெரியசாமி 47. பங்களாபட்டியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் சுரேஷ், சங்கர் ஆகியோருடன் சேர்ந்து தேவதானப்பட்டி பகுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பெரியகுளம்- வத்தலகுண்டு பைபாஸ் ரோடு பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் பெரியசாமியின் இரு கால்கள் முறிந்து,சம்பவ இடத்திலேயே பலியானார்.தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகன டிரைவரை தேடி வருகிறார்.