/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு மாடு குறுக்கே வந்ததில் டூவீலர் கவிழந்து ஒருவர் பலி
/
காட்டு மாடு குறுக்கே வந்ததில் டூவீலர் கவிழந்து ஒருவர் பலி
காட்டு மாடு குறுக்கே வந்ததில் டூவீலர் கவிழந்து ஒருவர் பலி
காட்டு மாடு குறுக்கே வந்ததில் டூவீலர் கவிழந்து ஒருவர் பலி
ADDED : ஜூலை 13, 2025 12:37 AM
தேனி:பெரியகுளம் அடுக்கம் ரோட்டில் காட்டு மாடு குறுக்கே வந்ததில் இரு டூவீலர்கள் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தன. இந்த விபத்தில் மதன்குமார் 25, பலியானார், 3 பேர் காயமடைந்தனர்.
பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி சிவா 20, மண்அள்ளும் இயந்திர ஓட்டுனர். இவரது நண்பர்கள் குள்ளப்புரம் செல்வக்குமார், நேருநகர் ஜான்பீட்டர், சி.எஸ்.ஐ., சர்ச் தெரு மதன்குமார் 25, ஆகியோர் இரு டூவீலரில் அடுக்கம் ரோட்டில் உள்ள மாந்தோப்பிற்கு சென்றனர். மீண்டும் திரும்பும்போது சிவா டூவீலரை செல்வக்குமார் ஓட்டினர். அவருக்கு பின் சிவா, ஜான்பீட்டர் அமர்ந்திருந்தனர்.
கும்பக்கரை பிரிவு ரவுண்டான அருகே வந்த போது காட்டு மாடு குறுக்கே சென்றது. செல்வக்குமார் திடீரென பிரேக் பிடித்தார். நிலை தடுமாறி டூவீலர் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது. அவர்களுக்கு பின்னால் வந்த மற்றொரு டூவீலரில் மதன்குமார் எதிர்பக்க பள்ளத்தில் விழுந்தார்.
இதில் காயமடைந்தவர்கள் டூவீலர் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மதன்குமார் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மதன்குமார் தந்தை புகாரில் ஒரு வழக்கும், சிவா புகாரில் செல்வக்குமார் மீது வழக்கு என இருவழக்குகள் பதிந்து பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.