ADDED : பிப் 08, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன் 34. பெயின்ட் கம்பெனி வேன் டிரைவராக உள்ளார். இவருடன் கிளினர் பெரியசாமி 66. சென்றார். சிவகாசியில் லோடு ஏற்றிக்கொண்டு போடியில் இறக்கியுள்ளனர். அங்கிருந்து கோவைக்கு செல்லும் போது, காட்ரோடு அருகே எதிரே வந்த கார் வேன் மீது மோதியது. இதில் வேன் கவிந்ததில் பெரியசாமி காயமடைந்தார்.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் கார் பதிவு எண் வைத்து தேடி வருகின்றனர்.