/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நின்றிருந்த லாரியில் கார் மோதி ஒருவர் பலி
/
நின்றிருந்த லாரியில் கார் மோதி ஒருவர் பலி
ADDED : மே 25, 2025 05:18 AM
தேனி, : புதுச்சேரி பாகூர் வாய்க்கால் ஓடையை சேர்ந்த லாரி டிரைவர் வீரப்பன் 54. இவர் தேனி பழனிசெட்டிபட்டி அருகே சரக்குகளை இறக்கி விட்டு ரோட்டோரம் லாரியை நிறுத்தியிருந்தார். மதுரையில் இருந்து மூணாறுக்கு காரில் சுற்றுலா சென்ற சோழவந்தான் வேதபாடசாலை தோப்பை சேர்ந்த லோகேஷ் 30, இவரது மனைவி அனுஸ்ரீ 25, முத்துராமலிங்கபுரம் இளஞ்செழியன் 47, இவரது மனைவி நிர்மலா 42 ஆகியோர் சென்றனர். காரை இளஞ்செழியன் ஓட்டினார். நேற்று காலை 6:00 மணிக்கு பழனிசெட்டிபட்டி அருகே சென்ற போது லாரியின் பின்புறம் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வரும் காயமடைந்தனர்.
இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். லோகேஷ் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். லாரி டிரைவர் வீரப்பன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.