/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் லட்சுமிபுரத்தில் கே.கே., அவென்யூ திறப்பு விழா
/
பெரியகுளம் லட்சுமிபுரத்தில் கே.கே., அவென்யூ திறப்பு விழா
பெரியகுளம் லட்சுமிபுரத்தில் கே.கே., அவென்யூ திறப்பு விழா
பெரியகுளம் லட்சுமிபுரத்தில் கே.கே., அவென்யூ திறப்பு விழா
ADDED : நவ 18, 2025 04:37 AM
தேனி: பெரியகுளம் லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே பைபாஸ் ரோட்டில் கே.கே., அவென்யூ அமைந்துள்ளது. இதன் திறப்பு விழா கே.கே., பில்டர்ஸ் இயக்குநர் சுப்புராஜ், பங்குதாரர் பாஸ்கரன் முன்னிலையில் நடந்தது. கவிதாலயா சரவணன் வரவேற்றார். இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது:
லாப நோக்கம் இன்றி மக்கள் வசதிக்கு ஏற்ப வயதான காலத்தில் இயற்கை சூழலில் நிம்மதியாக வாழ கே.கே., அவென்யூ 32 ஏக்கரில் அமைந்துள்ளது.
அரசு அனுமதி பெற்ற பிளாட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு 40, 60, 33 அடி அகல தார்சாலை, குடிநீர், வடிகால், தெரு விளக்கு, பூங்கா, சிறுவர் விளையாட்டு அரங்கம், நடைபயிற்சி பாதை, யோக தியான மண்டபம், 5 லட்சம் லி., கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.
உடனடி வங்கி கடன் வசதியுடன் வீட்டு மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது., என்றார்.
நிகழ்வில் கே.எம்.சி., குழும நிறுவனங்களின் தலைவர் முத்துகோவிந்தன், சாந்தி நிகேதன் பள்ளி தாளாளர் பிரபாகரன், எல்.எஸ்., ஸ்பின்னிங் மில் இயக்குநர் ஹர்சவர்த்தன், அபிராம், அரசு ஒப்பந்ததாரர்கள் பாண்டியராஜன், சன்னாசி, வசந்த், ஓபிஎஸ்.சரவணன், வர்த்தக பிரமுகர்கள் பிரபாகரன், சுரேஸ், சுதாகர், நாராயணபிரபு, செல்வகணேஷ், ராஜ்மோகன், டாக்டர்கள் மோகன், தியாகராஜன், அறவாழி, குலோத்துங்கன், இன்ஜினியர்கள் ராதாகிருஷ்ணன், பாலமுருகன், பரிதி இளம் வழுதி, ஒய்வூதியர் பெரியசாமி, தங்கராஜ், மணவாளன், முருகேசன், அரண்மனைசுப்பு, ரியல் எஸ்டேட் உரிமையாளர் லோகநாதன், பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் கலாபாண்டியன், சந்தனபீர்ஒளி, ரியல் எஸ்டேட்ஸ் நிறுவன இயக்குநர் சீனிவாசன், போலீஸ் டி.எஸ்.பி., நல்லு, இன்ஸ்பெக்டர் கீதா, தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன், தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் செல்வம், தொழில் உரிமையாளர்கள் டெர்ரி, ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை கே.கே.அவென்யூ ஆலோசகர் சீனிவாசன், ராஜ சேகர் செய்திருந்தனர். டாக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

