நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : க.புதுப்பட்டியில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய பிரசவ வார்டு கட்டப்பட்டுள்ளது.
அதனை எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன், டாக்டர் கார்த்திக், அயலக அணி அமைப்பாளர் ரவி, பேரூர் செயலாளர் பார்த்திபன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கு தற்போது கூடுதல் வசதிகளுடன் பிரசவ வார்டு திறக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பிரசவங்கள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் கூறினார்.