/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிமீறும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க ... எதிர்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்

ADDED : செப் 30, 2025 04:50 AM

தேனி மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த விரும்புவோர் பெரியகுளம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பித்து, அந்தந்த பகுதி போலீசார், தீயணைப்புத்துறையினர் ஆய்வுக்கு பின் டி.ஆர்.ஓ., பட்டாசு கடை அமைப்பதற்கான அனுமதியை வழங்குகிறார். இதில் நிரந்தர கடைகள் ஆண்டுதோறும்உரிமத்தை புதுப்பிக்கின்றனர். தற்காலிக கடைகள் நடத்த விதிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பித்தால் தீயணைப்புத்துறை, போலீசார், ஆர்.டி.ஓ., ஆய்வுக்கு பின் கடை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் நிரந்தரபட்டாசு கடைகள் 76 உள்ளன. கடந்தாண்டு 45 தற்காலிக கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 30 கடைகள் விதிகளை பின்பற்றததால் அவை நிராகரிக்கப்பட்டு 15 தற்காலிக கடைகளுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டது.
கோரிக்கை இந்நிலையில் நிரந்தர பட்டாசு கடைகளின் உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவி கூறியதாவது:
'அனுமதி பெற்ற நிரந்தர பட்டாசு கடைகளில் இரு வழிபாதை, வெளிப்புற ஒயரிங்,விசாலமான கையிருப்பு அறை, காற்றோட்டமான இடம், தீ தடுப்பு சாதனங்கள் உள்ளிட்ட கடைபிடித்து கடை நடத்துகிறோம்.ஆனால் தற்காலிக கடை நடத்த உரிமம் பெறுபவர்கள், பலர் இந்த விதிகளை பின்பற்றாமல் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் விதிமீறிய தற்காலிக கடைகளில் நிரந்தர கடைகளுக்கு போதிய வியாபாரம் இன்றி 12 கடைகள் மூடப்பட்டுள்ளது.
எனவே, விதிகளை முறையாக பின்பற்றாத தற்காலிக கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிமம் வழங்கக்கூடாது. அதே நேரத்தில் இந்தாண்டு விதிகளை பின்பற்றும் தற்காலிக கடைகளுக்கு கூடுதல் உரிமம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.