/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேயிலை தோட்டத்தில் வலம்வந்த படையப்பா யானை
/
தேயிலை தோட்டத்தில் வலம்வந்த படையப்பா யானை
ADDED : ஜன 20, 2024 05:34 AM
மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை தீவனத்தை தேடி ரோடு, குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் வலம் வருகிறது.
பெரியவாரை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்ட படையப்பா யானை அதே பகுதியில் நேற்று காலை 8:00 மணி தேயிலை தோட்ட எண் 8ல் நடமாடியது. அப்பகுதியில் நேற்று பகல் முழுவதும் முகாமிட்டதால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
வயது முதிர்வு: படையப்பா யானை வயது முதிர்வால் வனம், காடு ஆகியவற்றை தவிர்த்து ரோடு, குடியிருப்புபகுதி களில் தீவனத்தை தேடி அலைகிறது. பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் வனத்துறையின் தீவனங்கள் வழங்கி படையப்பா யானையை பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.