/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கன்னிமலை பகுதியில் படையப்பா; தூக்கத்தை இழந்த தொழிலாளர்கள்
/
கன்னிமலை பகுதியில் படையப்பா; தூக்கத்தை இழந்த தொழிலாளர்கள்
கன்னிமலை பகுதியில் படையப்பா; தூக்கத்தை இழந்த தொழிலாளர்கள்
கன்னிமலை பகுதியில் படையப்பா; தூக்கத்தை இழந்த தொழிலாளர்கள்
ADDED : மார் 16, 2024 06:33 AM

மூணாறு, : மூணாறு அருகே பிப்.26ல் தொழிலாளியை கொன்ற பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு படையப்பா யானை சென்றதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிடினில் தொழிலாளி சுரேஷ்குமார் பிப்.26 இரவில், அதே பகுதியில் காட்டு யானை தாக்கி இறந்தார். யானையை பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் சுரேஷ்குமாரை படையப்பா ஆண் யானை கொன்றிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதனை வனத்துறையினர் உறுதி செய்யவில்லை. இருப்பினும் படையப்பாவை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் செல்லும் வழியில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு படையப்பா நடமாடியது. அப்பகுதியில் வனத்துறையின் விரைவு நடவடிக்கை குழு முகாமிட்டனர்.
மூணாறு நகரில் பணி செய்வோரை இரவு 8:00 மணிக்கு முன்பு வீடுகளுக்கு பாதுகாப்புடன் செல்ல உதவினர். படையப்பாவின் நடமாட்டத்தை ' வாட்ஸ் அப்' குழுவில் பதிவிட்டு எச்சரித்தனர். அப்பகுதியில் இரவு முழுவதும் முகாமிட்டு படையப்பாவை கண்காணித்தனர். படையப்பா வந்ததை அறிந்த தொழிலாளர்கள் அச்சத்தில் தூக்கத்தை இழந்தனர். அப்பகுதியில் உள்ள 18ம் எண் தேயிலை தோட்டத்தில் நேற்று காலை படையப்பா நடமாடியது.
இந்நிலையில் டாப் டிவிஷன் செல்லும் வழியில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் நேற்று காலை முதல் முகாமிட்டன. அவை 6ம் எண் தேயிலை தோட்டத்தில் நடமாடியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

