/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் தேக்கம் மழையில் நனையும் அவலம்
/
கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் தேக்கம் மழையில் நனையும் அவலம்
கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் தேக்கம் மழையில் நனையும் அவலம்
கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் தேக்கம் மழையில் நனையும் அவலம்
ADDED : ஆக 25, 2025 03:31 AM

தேவதானப்பட்டி,: மேல்மங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் திறந்த வெளியில் கிடக்கிறது. தார்பாய் போட்டு மூடினாலும் மழை பெய்தால் மூடைகள் நனைவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
மேல்மங்கலம் பகுதியில் தற்போது இரண்டாம் போகம் நெல் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல் மூடைகள் மேல்மங்கலம் கொள்முதல் நிலையம் 1ல் கொள்முதல் செய்வதற்காக ஜெயமங்கலம் ரோட்டோரம் கொட்டி வைத்தனர்.
சாக்கு பற்றாக்குறையால் ஆக. 17,18 என இரு தினங்களாக எடை போடுவதுநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆக.19 முதல் சாக்கு வந்தவுடன் எடை போடப்பட்டது. தற்போது நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மூடைகள் 5 இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களாக எடையிடப்பட்ட நெல் மூடைகளுக்கு விவசாயிகளுக்கு வங்கி மூலம் இன்னும் பணம் பட்டுவாடா செய்யவில்லை.
விவசாயிகள் கோரிக்கை: மாவட்டத்தில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. அதே நேரம் மாலையில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடினாலும், ஓரத்தில் மழையால் மூடைகள் நனைகிறது. எனவே,மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு நெல் மூடைகளை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-