/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் சுந்தரவேலர் கோயிலில் பாலாலயம்
/
கூடலுார் சுந்தரவேலர் கோயிலில் பாலாலயம்
ADDED : பிப் 20, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் திருப்பணிகள் செய்து ஏப். 7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. யாகசாலை அமைத்து பூஜை நடத்தப்பட்டன. தர்ப்பைபுல் கயிறு அமைத்து கோபுரத்தில் உள்ள சக்தியை கும்பத்தில் இருந்து பிம்பத்திற்கு இறக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. சுந்தரவேலவர், வள்ளி, தேவசேனா மற்றும் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.
பாலாலயம் நிகழ்ச்சியை திருச்செந்துார் செந்தில் ஆண்டவர் கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணன் குழுவினர் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

