/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய சங்கங்களுடன் நடக்கவிருந்த கலந்துரையாடலை ரத்து செய்த பழனிசாமி
/
விவசாய சங்கங்களுடன் நடக்கவிருந்த கலந்துரையாடலை ரத்து செய்த பழனிசாமி
விவசாய சங்கங்களுடன் நடக்கவிருந்த கலந்துரையாடலை ரத்து செய்த பழனிசாமி
விவசாய சங்கங்களுடன் நடக்கவிருந்த கலந்துரையாடலை ரத்து செய்த பழனிசாமி
ADDED : செப் 06, 2025 02:53 AM
தேனி:தேனி ஓட்டலில் விவசாயிகளுடன் நேற்று நடக்க இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை -அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திடீரென ரத்து செய்து சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து கோரிக்கையை கேட்டறிந்தார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று தேனி பழனிசெட்டிபட்டியில் தங்கியிருந்த ஓட்டலில் விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து பேட்டியளித்தார். அந்த நேரத்தில் ஓட்டலில் தங்கியிருந்த பழனிசாமி எந்த சலனமும் இன்றி முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் விவசாயிகளுடன் நடந்த இருந்த கலந்துரையாடல் திடீரென ரத்து செய்யப்பட்டது.
பின்னர் ஓட்டல் கூட்டரங்கில் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்த நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது புகைப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடுதேசிய விவசாயிகள் சங்கம், ஆண்டிபட்டி மலர் விவசாயிகள் சங்கம், தபால்துறை சிறுசேமிப்பு முகவர்கள் மகளிர் சங்கம், சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 18ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்கம், கர்னல் ஜான் பென்னிகுவிக் மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் என்பன உள்ளிட்ட 15 சங்க நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டு, அ.தி.மு.க., ஆட்சிஅமைந்ததும் நிறைவேற்றி தருவதாக கூறினார்.