/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரி வருவாயில் 40 சதவீதம் அனுமதி ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
/
வரி வருவாயில் 40 சதவீதம் அனுமதி ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
வரி வருவாயில் 40 சதவீதம் அனுமதி ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
வரி வருவாயில் 40 சதவீதம் அனுமதி ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
ADDED : பிப் 18, 2024 01:45 AM
கம்பம்: ஊராட்சிகளில் கிடைக்கும் வரி வருவாயில் அரசு 40 சதவீதத்தை மட்டுமே அனுமதிக்கிறது. ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்ட வரி வருவாய் மானியமும் ரத்து செய்ததால் ஊராட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற வரிசையில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போதிய வரி வருவாய் உள்ளது.
மேலும் வரி வருவாயை அவர்களே வைத்து செலவு செய்து கொள்ளலாம். ஊராட்சிகளில் நிலைமை அப்படி இல்லை.
மாதந்தோறும் வழங்கும் மாநில நிதிக் குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வரி வருவாய் மானியம், வரி வருவாயை வைத்து சமாளித்து வந்தனர்.
கடந்த ஓராண்டாக ஒப்படைக்கப்பட்ட வரி வருவாய் மானியம் ரத்து செய்து வழங்கப்படுவது இல்லை.
வரி வருவாய் எஸ்.என். ஏ ( சிங்கிள் நோடல் அக்கவுண்ட் ) கணக்கிற்கு கட்டப்படுகிறது. அந்த வரி வருவாயை ஊராட்சிகள் தொட முடியாது.
ஒவ்வொரு மாதமும், மாத இறுதியில் வசூலான வரி வருவாயில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே திருப்பி வழங்கப்படுகிறது.
எந்த அடிப்படையில் அரசு வரி வருவாயையும் எடுத்துக் கொள்கிறது என்பது தெரியவில்லை. இதனால் ஊராட்சிகளில் நிர்வாகம் செய்ய முடியாமல் ஊராட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.